தமிழகத்தில் பண்டிகை காலங்களை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிகமாக பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அக்டோபர் 14 முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழா காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு தணிக்கை அறிக்கை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடிகளில் தனி வழி அமைக்க சுங்கச்சாவடிகள் அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியின்போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு இந்த எண்கள் மூலம் தொலைபேசி மூலமாக அல்லது whatsapp மூலம் குறுஞ்செய்தி அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் போக்குவரத்து துறையின் மூலமாக எடுக்கப்படும் நடவடிக்கையை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை | 1800 425 5161 | |
| 2 | இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை | 97893 69634 |
|---|---|---|
| 3 | இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) | 93613 41926 |
| 4 | இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை | 90953 66394 |
| 5 | இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் | 93848 08302 |
| 6 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் | 96773 98825 |
| 7 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் | 98400 23011 |
| 8 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் | 78456 36423 |
| 9 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு | 99949 47830 |
| 10 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி | 90660 32343 |
| 11 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் | 90257 23800 |
| 12 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி | 96981 18011 |
| 13 | துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் | 95850 20865 |
