தினமும் காலையில் எழுந்ததும் அன்றாடம் நாம் தவறாமால் செய்வது டீ, Coffee குடிப்பது. அதுவும் காபி லவ்வர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தினமும் ஒரு இரண்டு முறை காபி குடிக்காமல் இருந்தாலும் கூட அவர்களுக்கு தலைவலி அசௌகரியம் தோன்றும். ஆனால் அதிகப்படியான டீ காபிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் கூறினாலும் குறிப்பாக இந்திய மக்களின் வாழ்க்கையில் இருந்து இந்த டீ Coffeeயை விலக்கி வைத்து விட முடியாது. தற்போது காபி லவ்வர்களுக்காக ஒரு நற்செய்தி வந்திருக்கிறது. அது குறிப்பிட்ட நேரத்தில் காபியை அருந்தும் போது ஒருவரின் வாழ்நாள் ஆயுள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.
Coffee பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் இந்த சூடான காபியை குடிக்க சிறந்த நேரம் எது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது. Coffee குடிக்க மிகச்சிறந்த நேரமாக இருப்பது காலை நேரம்தான். European Heart Journal வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவில் காலை நேரத்தில் காபி குடிப்பவர்கள் இதய நோயால் பாதிப்படையும் ஆபத்து குறைவு என்றும் நாள் முழுவதும் Coffee குடிப்பவர்களை விட இவர்களுக்கு இறப்பு ஆபத்து விகிதமானது குறைவு என்று அந்த ஆய்வில் வெளிவந்திருக்கிறது.
காலையில் Coffee குடிப்பது பிற்பகலில் காபி குடிப்பதை விட சிறந்தது எனவும் காலையில் காபி குடிப்பதன் மூலம் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவாகவும் இறப்புக்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவாகவும் இருக்கிறது. நீங்கள் காபி குடிக்கிறீர்கள் என்றால் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல எந்த நேரத்தில் குடிக்கிறீர்கள் என்பதும் முக்கியம்தான்.
Coffee குடிக்கும் நேரம் முறைகள் மற்றும் சுகாதார விளைவுகள் பற்றி வெளிவந்திருக்கும் முதல் ஆய்வு இதுதான் என கூறப்படுகிறது. மதியம் அல்லது மாலை நேரங்களில் காபி குடிப்பது சர்க்கார்களையும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் லெவலையும் சீர்குலைக்க கூடும் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் மாலை நேரத்தை விட காலை நேரத்தில் Coffee பருகுவது ஆயுளை நீட்டிக்கும் என்று கூறுகிறார்கள்.
