தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்கள். இதற்கிடையில் தான் கரூரில் விஜய் பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கு நடந்த நிலையில் நிலையில் தான் இன்று உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் செய்துயாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசிய CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார், அதையே பாஜக எம்.பி.க்கள் குழு சொல்கிறது, அதுவே இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாக வருகிறது. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்த சம்பவத்தை பயன்படுத்தி விஜய்யை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நினைக்கிறது போல என்றார்.
