பீகார் மாநிலம் கிஷன்கஞ்சில் எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்கும் மஹதோ என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு மக்களவை மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு, எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தி வருகிறார். ஆனால், பலமுறை பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், அவரது நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், மஹதோ மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் தனது 23 வயதில் 2000 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் வயது வரம்பு காரணமாக அது நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவர் மனம் தளராமல், நகராட்சி தேர்தல்கள் உட்பட தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் 2004 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். நான் இன்னும் வெற்றி பெறவில்லை, ஆனால் நான் ஒருபோதும் கைவிடவில்லை. இந்த முறையும், நான் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
