தனியார் ரயில் செயலிகள் பயன்படுத்துறீங்களா..? அப்போ உஷாரா இருங்க… ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை..!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்காகவும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் ரயில்வே செயலிகள் மூலம் வழங்கப்படும் ரயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங்களில் பயணிகளை ஏமாற்றமடைய செய்வதாகவும், ரயில்களை தவறவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ரயில் பயணிகள் எச்சரிக்கையோடு செயல்படுவது  மிக அவசியம், ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே தகவல் பெறுவதற்காக பயணிகள் பயன்படுத்த வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.