டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கிறீங்களா..? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்…!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

கோடிக்கணக்கான மக்கள் டீயை விரும்பி குடிக்கிறார்கள். காலை எழுந்தது மாலை என டீ குடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் தற்போது இருக்கும் பல மக்களுக்கு அதை சூடு படுத்தி குடிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால் Journal of Food Science- ஆய்வில் டீயை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி குடிக்க கூடாது மீறினால் அதில் இருக்கும் கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும். பயோ ஜெனிக் அமீன்கள் போன்று தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது.

டீயில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றுகள் உள்ளது . அவை வீக்கத்தை குறைக்கவும் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் சூடு படுத்தி குடித்தால் இந்த ஆக்சிஜனேற்றிகள் அழிந்து தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் உண்டாகும் தேநீரில் கிருமிகள் வளரும் என்று சொல்லப்படுகிறது. இந்த கிருமிகள்டீயை மீண்டும் சூடு படுத்தும்போது அழிந்து போகாது.

   

குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். பால் சேர்க்கப்பட்ட நிலையில் நான்கு மணி நேரத்திற்கு பிறகு பாக்டீரியா மாசுபாட்டிற்கு ஆளாகிறது. இதில் மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு பொருள் மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். டீ சூடு படுத்தினால் அதன் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல் இரப்பை அலர்ஜி போன்ற நிலைமைகளை மோசமாக்கும்.