கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அதிமுக மூலமாக விஜயை தங்களுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் விஜய்யை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் அதனை சூசகமாக தெரிவித்து இருந்தார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையில் கரூருக்கு விஜய் சென்றால், அவரை கொல்ல வாய்ப்பிருப்பதாக நயினார் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமா, “மக்கள் செல்வாக்கு உள்ள விஜய், கரூருக்கு வந்து செல்வதில் என்ன பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். CBI விசாரணையை TVK கோருவது ஏன்? என்றும் கேட்டுள்ளார். நயினார், தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அண்ணாமலையே தலைவர் போல செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
