“எப்படியும் டாஸில் தோல்விதான், வாங்க ரன் அப் எடுக்க போகலாம்”… சுப்மன் கில்லை கலாய்த்த வீரர்கள்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதல் இன்னிங்சில் 518 ரண்களை குவித்தது. முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஆறு போட்டிகளில் அவர் டாஸ் இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக அவர் டாஸ் வென்றார்.

அவர் வென்றதை பின்னாடி இருந்து பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேதபந்துவீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் ஒரு வழியாக டாசில் வெற்றி பெற்றுவிட்டார் என்பது போல சிரித்துக்கொண்டனர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சதவீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் அவரிடம் நீ எப்படியும் டாசில் தோல்வி அடைந்து விடுவாய் என்று பும்ரா பௌலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக்கொண்டே கூறினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.