“எனக்கு கல்யாணம் தான் முக்கியம்”… காதலியை கரம் பிடிக்க இளைஞர் செய்த தில்லாலங்கடி வேலை… மிரண்டு போன போலீசார்…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் காதலியை திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயாஸ் என்ற 22 வயது வாலிபர் தன்னுடைய உறவினரான ஹரிஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே இவர் கடந்த நான்கு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டு உள்ளது.

அதற்காக ஸ்ரேயாஷ் ஹரிசின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட நிலையில் அவருடைய வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக ஹரிஷ் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஸ்ரேயாஷ் பணம் மற்றும் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 416 கிராம் தங்கம் மற்றும் 3.46 லட்சம் பணத்தை கைப்பற்றினர். இதன் மொத்த மதிப்பு சுமார் 47 லட்சம் என கூறப்படுகிறது. காதலிக்காக காதலன் செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.