அடுத்த அறிவிப்பு…. தீபாவளி பரிசாக ரூ.18,000…. தமிழக அரசு HAPPY NEWS….!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் தீபாவளி பரிசை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

அதாவது தொடக்க வேளாண் கூட்டுறவு, நகர கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளின் பணியாளர்களுக்கு தலா 18,000 வழங்கப்படும். மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தலா 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தலா 30,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.