தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருப்பவர்தான் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்சன் ஹீரோ மற்றும் வில்லன் என்று பல வேடங்களில் நடித்து ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவராக உள்ளார். அஜித்தின் நடிப்பில் இதுவரை சுமார் 63 திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 64ஆவது திரைப்படத்திற்கு ஏகே 64 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில் மைத்திரி மூவி மேக்கர் தயாரிக்கின்றது. கிருஷ்ணது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அஜித் துபாய் மற்றும் பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் அஜித் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்க நேரம் கிடையாது. விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே எனக்கு தூக்க நேரம் கிடைக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் எனக்கு தூக்க பிரச்சனையும் உள்ளது. எனக்கு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். அப்படியே நான் தூங்கினாலும் அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குவேன் என்று அஜித் கூறியுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் போதிய அளவான தூக்கம் அவசியமாகும். பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக தூக்கமின்மை உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது அவசியமாகும். ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு சராசரியாக 8 மணி நேர தூக்கம் என்பது இன்றியமையாதது. எனவே தூங்குவதில் சிரமம் இருப்பவர்கள் அவசிய முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
