BREAKING: “அரசு மீது நம்பிக்கையில்லை” ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் SIT அமைக்க வேண்டும்… தவெக தரப்பு..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

கரூர் துயர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணை கோரும் 5 மனுக்கள் ஆகியவை இன்று SC-யில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக வெற்றிக் கழக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. மேலும், காவல்துறை சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்னைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக-வினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் கூறியது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள SIT யில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தவெக தரப்பு வாதம் வைத்துள்ளது.