திண்டுக்கல்லில் கர்ப்பிணியாக இருந்த மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய நபர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருடைய மகளான சவுபரணி என்பவர் கௌதம் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கௌதமுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. பிறகு மகளுக்கு அறிவுரை கூறிய சரவணன் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளார்.
இதனைக் கேட்டுக் கொண்ட சவுபரணி தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இப்படியான நிலையில் கௌதம் தனது மனைவியை வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் சரவணன் கடுமையாக கோபமடைந்து தனது நண்பர் வேலுச்சாமி உடன் சென்று மருமகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவருடைய நண்பர் வேலுச்சாமி ஆகியோர் கௌதமை பேருந்தில் தள்ளிவிட்டு உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கௌதம் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன் மற்றும் வேலுச்சாமி ஆகியவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
