“உயிருக்கே ஆபத்து”… அங்கு என்ன பூதமா இருக்கு… மீண்டும் வெடித்த மோதல்… நயினாரை வெளுத்து வாங்கி அண்ணாமலை…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது தங்கள் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு சாதகமாக செயல்பட்டு அவரையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் கரூர் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இருவரும் இரு வேறு விதமாக கருத்துக்களை கூறி வருவது அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து என்று நயினார் நாகேந்திரன் கூற, அங்கே என்ன பூதமா இருக்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பணிப்போர் நீடிப்பதாக சொல்லப்படும் நிலையில் அதனை உறுதிப்படுத்துவதாக பலரும் தற்போது கருத்து கூறி வருகிறார்கள். இதனால் தமிழக பாஜகவில் நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வண்ணம் உள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.