உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெராஜ். இவர் நசீமுன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மெராஜ் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் கட்டாயப்படுத்தி எனக்கு எனது மனைவியை திருமணம் செய்து வைத்தார்கள். அன்றிலிருந்து இரவு நேரத்தில் எனது மனைவி நாகினி போல சீறி பாய்ந்து கடிக்க முயற்சி செய்கிறார். தூங்கும்போது பாம்பு போல உஷ், உஷ் என சத்தம் போடுகிறார். பலமுறை என்னை பயமுறுத்தி கொலை செய்ய முயன்றார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது என்னை என் மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நசீமுன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதை மறைத்து திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. மெராஜின் குற்றச்சாட்டை பெண் வீட்டார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
