ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தி 200க்கும் அதிகமான நபர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. இந்த தாக்குதலில் 64, 700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
பாலஸ்தீனியர்கள் அடிப்படை தேவையான உணவு, இருப்பிடம், உடை இல்லாமல் தவிக்கின்றனர். காசாவில் குழந்தைகளும் பெண்களும் பசியில் வாடுகின்றனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லாத பெண்கள் உதவிக்கு வரும் ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வரும் ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் தொலைபேசி எண்களை வாங்கிக்கொண்டு தவறான நோக்கத்தில் அவர்களை தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது.
