தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.
இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கான மெசேஜ் மட்டுமே. இதனால் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற அர்த்தம் கிடையாது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு வாய்ந்தவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை கிடைக்கும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு சார்பில் எஸ்எம்எஸ் வந்ததும் மகிழ்ச்சி அடைந்த குடும்ப தலைவிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
