தமிழகத்தில் மது கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அண்மையில் மனு வழங்கியுள்ளது.
ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் மது பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கூட்ட நெரிசலை தவிர்த்து டாஸ்மாக் கடைகளில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
