தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் மகளிர் உரிமை தொகையை 2,000 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்டுகிறது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாம். 2026 தேர்தலில் அதிமுக வென்றால் 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
