சினிமாவை மிஞ்சும் சம்பவம்..! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 7 பேர் மாறி மாறி… ஒவ்வொரு இடமாக கடத்திச் சென்று…18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் ஏழு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். தனது உறவினர் வேண்டுமென்றே தன்னை சிக்க வைத்ததால் தான் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

தாமர் காவல் நிலைய பொறுப்பாளர் பிரவீன் குமார் மோடி கூறுகையில், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, “இந்த சம்பவம் செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்தது. மர்தான் மோரில் நடைபெறும் தசரா விழாவிற்குச் செல்ல அவரது உறவினர் அவரை அழைத்தபோது அங்கு இரண்டு பேர் வந்தனர், அவர்களில் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் அப்பெண்ணை சோனா துங்ரி ருக்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேலும் இரண்டு பேர்  அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். அங்கிருந்து, அவர்கள் அவரை பூண்டுக்கு அழைத்துச் சென்று அங்கு மேலும் மூன்று பேர் அவரை  பாலியல் பலாத்காரம் செய்தனர்.

   

பூண்டுவிலிருந்து, அவரை  ராஞ்சிக்கு அழைத்துச் சென்று அங்கு மேலும் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அவர்கள் அவளை தாமர் பகுதியில் உள்ள மர்தான் மோரில் விட்டுச்சென்றுள்ளதாக கூறியுள்ளார். ஏழு பேர் மீது தாமர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேர் இன்னும் தெரியவில்லை. குற்றவாளிகளைக் கைது செய்ய பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.