“அம்மா நான் தான் விஜய்” 10 நாட்கள் கழித்து… பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசிய விஜய்..??

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பெரிய அவமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 10 நாள்களாகியும் களத்திற்கு செல்லாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் விஜய்.

இதனிடையே கட்சியின் மீதான அவப்பெயரை மாற்றும் முயற்சியில் கட்சித் தலைவர் விஜய், தீவிரமாக களமிறங்கியுள்ளார்.  இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததே காரணம் என தவெகவ கட்சியினர் கூறினர். இந்நிலையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தனுஷ்குமார் என்பவருடைய தாய் மற்றும் தங்கைக்கு, விஜய் வீடியோ கால் செய்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் கரூர் வருவேன் என அவர்களிடம்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.