திடீர் திருப்பம்… பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் விஜய்?… பரபரப்பை கிளப்பிவிட்ட திருமாவளவன்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனிடையே ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜயை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. எந்த பிரச்சனைகளிலும் விஜய் சிக்காமல் இருப்பதற்காக பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் அவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து 2026 தேர்தலில் அவருடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என தான் நம்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் விஜயை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள், சிறுபான்மையினர்களின் வாக்கை சிதறடிக்கும் நோக்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக திருமாவளவன் சாடியுள்ளார்.