BREAKING: இனி யாரையும் நம்ப முடியாது… திடீரென விஜய் எடுத்து அதிரடி முடிவு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனிடையே ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர்களாக இருந்த நம்பிக்கையானவர்களை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கரூரில் பாதிக்கப்பட்டோர் இடம் அவர் முதல் கட்டமாக வீடியோ காலில் பேச முடிவு செய்துள்ளாராம்.