கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுகுப்பத்தை சேர்ந்த அனிதா என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அவர் தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் சுமார் 33 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். பிரபுவின் மனைவி கோமளா ஆயுதப் படையில் போலீசாக வேலை பார்க்கிறார். அவரும் பிரபுவுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
எனவே கணவன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிதா புகாரில் குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவன்,மனைவி இருவரும் மக்களிடம் பணத்தை மோசடி செய்தது உறுதியானது. இதனால் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோமளாவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
