சற்றுமுன் பரபரப்பு…. கரூர் துயரம்… உடனே கைது செய்ய விரைந்த போலீசார்…. செம ஷாக்கில் விஜய்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் விஜய்க்கு எதிராக பல ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே விஜய் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். இருவரும் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் இருவரும் தலைமறைவாக இருக்கும் இடம் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளதாகவும் இன்றே அவர்கள் இருவரையும் கைது செய்ய தனிப்படை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.