தமிழகத்திலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் கோவில்களுக்குள் நுழைந்து பயமுறுத்தும் காட்டு யானை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், உணவு தேடிச்சென்ற ஒற்றை காட்டு யானை பக்தர்கள் அனைவரையும் நொடி பொழுதில் அலற வைத்தது. அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவுப்பொருட்களை சேதப்படுத்தி அந்த யானை கடந்த காலங்களில் வனத்துறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காலங்களில் கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அந்த யானையை பார்த்ததும் தப்பிக்க முயன்றனர். அதனை ஒரு பக்தர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். கோவிலுக்குள் யானை நுழைந்ததும் மகிழ்ந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு பயத்தில் ஓட்டம் பிடித்தனர். வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலிலும் நிரந்தரமாக கும்கி யானை முகாமை அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“ஓடுங்க, ஓடுங்க, திரும்பி பார்க்காதீங்க… பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை: வைரல் வீடியோ! pic.twitter.com/aIYQSpf8Cm
— Indian Express Tamil (@IeTamil) October 3, 2025
