இதுதான் அதிர்ஷ்டம்..! விளையாட்டுக்காக வாங்கிய லாட்டரி சீட்டு… அடுத்த நொடியே கோடீஸ்வரனாக மாறிய நபர்… வியக்கவைக்கும் சம்பவம்…!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

மிச்சிகனில் உள்ள வெய்ன் கவுண்டியில் வசிக்கும் 32 வயது நபர் ஒரு ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கியபோது அவரது அதிர்ஷ்டம் மாறியது. அதாவது அவர் விளையாட்டுக்கான  சில டிக்கெட்டுகளை வாங்க முடிவு செய்தார்.  அந்த நபர் வழக்கமாக இதுபோன்று வாங்குவதில்லை. ஆனால் அன்று அவருக்கு திடீரென்று அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்,  “நான் வழக்கமாக 100X விளையாட்டை விளையாடுவதில்லை, ஆனால் அன்று, கடையில் டிக்கெட்டுகளைப் பார்த்து, திடீரென்று சிலவற்றை வாங்கினேன்.. அவர் டிக்கெட்டை சுரண்டி பார்த்தபோது ​​11வது எண்ணில்  2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 17 கோடி) பரிசு விழுந்தது தெரியவந்தது.

ஆரம்பத்தில்,  அதை நம்பவே முடியவில்லை.  உண்மையில்  17 கோடி வென்றதை என்னால் நம்ப முடியவில்லை.எனது  வெற்றியை உறுதிப்படுத்த,   தனது தாயிடம் டிக்கெட்டை மீண்டும் மீண்டும் சரிபார்க்க சொன்னேன் . வெற்றி பெற்ற பணத்தை தனது சேமிப்பில் முதலீடு செய்வதன் மூலம் தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவதாக அந்த நபர் கூறினார்.