சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மகள் சௌந்தர்யா(27) பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் தினகரன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்தது.
ஒரு கட்டத்தில் தினகரன் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் சௌந்தர்யா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒரு பெண்ணை தினகரன் திருமணம் செய்யப் போவதாக சௌந்தர்யாவுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் தினகரன் வீட்டிற்கு முன்பு சௌந்தர்யா தர்ணாவில் ஈருபட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சௌந்தர்யா கூறியதாவது, என்னை தினகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்.
அவரது பெற்றோரும் உறவினர்களும் நீ தான் எங்க வீட்டு மருமகள் என என கூறி நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல நடந்து கொள்கின்றனர் என கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சௌந்தர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி விசாரணை நடத்தி வருகின்றனர்.
