திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று சிலர் இந்த ஹோட்டலில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். இதனை அடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மட்டன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தட்டில் இருந்த மட்டன் பிரியாணியை காண்பித்து ஹோட்டல் ஊழியர்களிடம் இது என்ன? என வாடிக்கையாளர்கள் கேட்பதும், ஹோட்டல் திறப்பில் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்பதும் அங்கிருந்தவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
