கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் வருத்தமோ, மணிப்போ கேட்கவில்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது, கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம், ஆனால் கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது, மக்களுக்கு எல்லா உண்மைகளும் நன்றாக தெரியும், விரைவில் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இரங்கல் கூட்டத்தை கூட விஜய் அறிவிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இது சாமானிய மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, விஜய் அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு தவெக கூட்டத்தை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை;.விஜய்யும் காலதாமதம் பண்ணியிருக்கக் கூடாது. இனி விஜய் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல் தொகுதி வாரியாக சென்று சந்திக்கலாம் அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம் போடலாம்” என்று கூறியுள்ளார்.
