பிலிப்பைன்ஸ் நாட்டில் இரவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என்று மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போஹெல் மாகாண பகுதியில் சுமார் 33,000 மக்கள் வசித்து வருகிறார்கள். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் லெய்ட், செபு மற்றும் பிலிரான் கடலோர பகுதிகளில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் நிலநடுக்கம் மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Video of the M6.9 earthquake hitting Bantayan, Philippines…😱
📹 Photoholic Island/fb pic.twitter.com/Nm2K2tJ2wz
— Volcaholic 🌋 (@volcaholic1) September 30, 2025
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் பண்டாயன் பகுதியில் ஒரு தேவாலயம் இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
