கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினரும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மக்களுக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பார்த்து பார்த்து இடங்களை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் நடக்கக்கூடாது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பெரிய துயரம் நடந்திருக்கும்போது எப்படி என்னால் சென்னை திரும்ப முடியும். இருந்த போதும் நான் மீண்டும் சென்றால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் செல்லவில்லை. இதை வைத்து வேறு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் சென்னை திரும்பினேன் என்று கூறி விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
