ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள். அதற்கு பதிலாக வெறும் கையுடன் வெற்றியை கொண்டாடி தீர்த்தர்கள். இதனையடுத்து நிர்வாகம் கோப்பையை அறைக்கு கையேடு எடுத்து சென்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் ஒப்படைக்கத் தயார் என்றும், ஆனால் அதற்கு அவர் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கோப்பையை கொடுப்பதற்கு முறையான விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாராம். ஆனால் அபப்டி ஒரு விழாவை மீண்டும் வைக்க வாய்ப்பு குறைவு என்றும், இப்போதைக்கு இந்திய அணிக்கு கோப்பை கிடைப்பதற்க்கான சூழல் உருவாகவில்லை என்றும் கூறப்படுகிறது .
