பிரதமர் ஜி..! முதலில் கிரிக்கெட்டை போர்க்களத்தோடு ஒப்பிடாதீங்க… இந்திய அணியை பார்த்து கத்துக்கோங்க… காங்கிரஸ் பதிலடி..!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இந்திய பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்து ஒரு முடிவு. அதே முடிவுதான் இந்தியா வெற்றி பெற்றது. நம்முடைய கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா இந்த பதிவை டேக் செய்து, “பிரதமர் ஜி முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்தோடு ஒப்பிடுவது சரியானது அல்ல.

இரண்டாவது நீங்கள் எந்த வகையில் ஒப்பீடு செய்திருந்தால் அதன் பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது வெற்றியை நெருங்கி வந்த போது எந்த ஒரு மூன்றாவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.