சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,வலி இருக்கா…? தொற்றை சரிசெய்ய இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2025

Spread the love

மனித உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு பணி உள்ளது. ஒரு உறுப்பு பாதிப்படைந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவையை வெளியேற்றும் செயல்பாட்டை சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகம் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் இந்த செயல்பாட்டை செய்கிறது. சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் ஏற்படும். கடுமையான சிறுநீர் பாதை தொற்றி இருப்பவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிறந்த சிகிச்சை முறையாகும்.

இந்த தொற்று வராமல் நம் வீட்டிலேயே தடுத்து நிறுத்தலாம். முதலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். இது தொற்றை தடுப்பதுடன் குணப்படுத்தவும் உதவும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது அனைத்து பாக்டீரியாக்களையும் சிறுநீரக பாதை வழியாக வெளியேற்றும். ப்ரோபயோடிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது நாள்பட்ட நோய்களும் தடுக்கப்பட்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.