ஷாக்..! குற்றம் நிரூபிக்கப்பட்டால்… விஜய்க்கும் ஆயுள் தண்டனையா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததியர சம்பவம் தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்திற்கு கொடிக்கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரை அதிகாலையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று கைதான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அவர் அடைக்கலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் BNS சட்டத்தின் கீழ் N.ஆனந்த், CTR நிர்மல் குமார், மா.செ மதியழகன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ‘மற்றும் சிலர்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், விசாரணையின் முடிவில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டால் அவருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.