பாஜக மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா உடல் நலக்குறைவால் தன்னுடைய 93ஆவது வயதில் காலமானார். இவர் மொத்தம் ஐந்து முறை எம்.பி.-யாகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 2004 ஆம் வருட மக்களவைத் தேர்தலில், டெல்லியில் வென்ற ஒரே பாஜக வேட்பாளர் விஜய்குமார் தான் . இந்நிலையில் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.
