ஆசையாக விளையாடச் சென்ற சிறுமி… மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை… 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 35 வயது உடைய சதீஷ்குமார் என்பவர் வீட்டின் அருகிலேயே பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். சதீஷ்குமாரின் மகளும் அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். சதீஷ்குமார் தினமும் மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும்போது மகளின் தோழியான 13 வயது சிறுமியையும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.

சிறுமிகள் இருவரும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது என பழகி வந்த நிலையில் 13 வயது சிறுமியை அடிக்கடி சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து சற்றுள்ளார். அதேபோல ஒரு நாள் 13 வயது சிறுமி சதீஷ் வீட்டுக்கு அவருடைய மகளுடன் விளையாட சென்ற போது வீட்டில் சதீஷ் மனைவி மற்றும் மகள் இல்லாத நிலையில் அவர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறாமல் இருந்துள்ளார். ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சதீஷ் மாணவியை விரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

   

இந்நிலையில் கடந்த சில நாட்களாக 13 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது சதீஷ்குமார் தன்னை துன்புறுத்தியதை கூறியுள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.