திடீரென கொக்கி கழன்று சரிந்து விழுந்த ராட்டினம்… பதறிய பொதுமக்கள்… வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது ஊஞ்சல் திடீரென பழுதடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூடியிருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு பெரிய விபத்தாக மாறாமல் தவிர்த்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ரைசர் மாவட்டம் கண்டேரா தாம் கோவிலில் நடந்த கண்காட்சியில் கைமுறையாக இயங்கும் ஊஞ்சல் மக்கள் பலரையும் ஏற்றி கொண்டு சுழன்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அதன் கொக்கி அருந்து கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பயத்தில் அலறியபடி ஓடினர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் ஊஞ்சலில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்பு மற்றும் காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.