இன்று காலை முதலே தமிழக பதிவுத்துறை இணையதளம் சரியாக செயல்படாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தற்போது முற்றிலுமே முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் டோக்கன் பெற்ற மக்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அதேசமயம் இணையதளம் முடங்கியதால் தமிழக அரசுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
