தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறினார். இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது சொல்லலாம்.
View this post on Instagram
மேலும் இந்த சம்பவம் அரசியலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? மக்கள் ஆதரவு கிடைக்குமா? என்றெல்லாம் பல்வேறு கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இன்னொரு தரப்பினரோ விஜய் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், மற்றொரு பக்கம் அவர் மீண்டு வருவார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று அழுகிறது. அவருடைய அம்மா எதற்காக அழுகிறாய்? என்று கேட்கிறார். அதற்கு விஜய்யை BLOCK பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கும்மா” என்று அழுகிறது.
