கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்… அழிக்கப்படும் தடயங்கள்… பரபரப்பு சிசிடிவி காட்சி…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் விஜய் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் அளித்த பிறகு தமிழக வெற்றி கழகம் வழக்கறிஞர் அறிவழகன் பேசுகையில், செந்தில் பாலாஜி குறித்து பேசியவுடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடப்பதால் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும். களத்தில் நடந்ததை வீடியோ பதிவு செய்துள்ளோம். அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளது புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.