விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்த பைக்….! அடுத்த நொடியே… தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறினார்.

இந்த நிலையில் விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது ஒரு பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரச்சார வாகனத்தின் முன்பு பைக்கில் சென்ற சிலர் வீடியோ எடுத்தனர். அப்போது வலது பக்கம் வந்த பைக் பிரச்சார வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பைக்கில் சென்றவர்கள் சிறிய காயத்தோடு உயிர் தப்பினர். இந்த வீடியோ இணையத்தில் பல விவாதத்தை கிளப்பியுள்ளது.