பீகாரில் கள்ளகாதலில் இருந்த மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த மருத்துவரான முராரி என்பவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவி உள்ளார். இதனிடையே மருத்துவர் முராரியின் உடல் முட்புதறில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் சந்தேகம் குமாரியின் பக்கம் திரும்பிய நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பிரின்ஸ் என்ற நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து புதரில் வீசியது தெரிய வந்தது.
பிரின்ஸ் என்பவர் முராரியின் மருத்துவமனையில் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் குமாரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது உறவு பற்றி தெரிந்து கொண்ட முராரி தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். கள்ள காதலை விட்டு விடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரி தனது கள்ளக்காதலன் பிரின்ஸ் வரவழைத்து முராரியை கொலை செய்து அவருடைய உடலை புதரில் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து முடாரி மற்றும் பிரின்ஸ் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
