தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையாற்றி வரும் விஜய், பாஜகவுடன் கூட்டணி தேவையா என எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. திமுகவிற்கு போடப்படும் வாக்கு பாஜகவிற்கு போடப்படும் வாக்குக்கு சமம். திமுக மற்றும் பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
