அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை, செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி… நானும் அடிச்சு விடட்டுமா… விஜய் ஆவேசம்…!

By Nanthini on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையாற்றி வரும் விஜய்,  ஏதாவது புதுசா பேசுங்க புதுசா பேசுங்க நான் என்னத்த பேசுறது. இங்க இருக்கிற பிரச்சினை தானே பேச முடியும். அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை, செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, காத்துல வீடு கட்டலாம் என்றெல்லாம் நானும் அடிச்சு விடட்டுமா. திமுகவைப் போல் நானும் போய் வாக்குறுதிகளை கொடுக்கட்டுமா என்று விஜய் கோபமாக பேசியுள்ளார்.