“இரண்டு சனியன்கள்” இந்த பக்கம் அண்ணா, அந்த பக்கம் MGR… விஜய்யை பகிரங்கமாக அட்டாக் செய்த சீமான்..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற  என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இந்தவாரம் நாமக்கல், கரூரில் நாளை பரப்புரை மேற்கொள்கிறார் விஜய்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இந்த பக்கம் அண்ணாவை வச்சிக்கிட்டாரு, அந்த பக்கம் எம்ஜிஆர் என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு,  ரெண்டையும் சேத்து ஒரு சட்டையை தச்சிக்கிட்டு சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிடுவாரு. இதுல என்ன மாற்றம் வருது? ” என காட்டமாக பேசியுள்ளார்.