திமுகவில் நிர்வாக வசதிகளுக்காக நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதிகள் அடங்கி நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன், நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகள் அடங்கிய நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.
