பாமகவில் சமீபகாலமாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இது இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அன்புமணியின் ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸை கொலை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அன்புமணியின் ஆதரவாளர்கள் வந்துவிட்டார்கள். ” என தெரிவித்தார்.
