“இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கியவரை” பிரதமரே உங்க நண்பர் டிரம்ப் என்ன சொல்லியிருக்கார் பார்த்தீங்களா.? “நமக்கு நாடு தான் முக்கியம்” எச்சரித்த காங்கிரஸ்..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், ராணுவ தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து உபசரித்துள்ளார். இதன் போது இருநாட்டு உறவுகள், வருங்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை சென்றது இதுவே முதல் முறை.  50% வரி உள்ளிட்ட சம்பவங்களால் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்கா சமீப காலமாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது.

அதிபர் டிரம்ப் இருவரையும் சிறந்த மனிதர்கள் என்று விவரித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிடப்பட்ட  பதிவில், ” பிரதமர் மோடியின் அன்பான நண்பர் பாகிஸ்தானின்  ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.  இந்திய குடிமக்களின் கொலைகளை திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனீர் இவர்தான். நரேந்திர மோடி தைரியமாக இருங்கள். ட்ரம்பின் அறிக்கையை எதிர்க்கவும். நாடுதான் முதலில் முக்கியம். நட்பு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.